H

என்னைப் பற்றி

My photo
Qatar, North, Qatar
Graphic Designer, (Adobe Photoshop cs5 Adobe Illustrator cs5 Adobe in-design cs5 Corel Draw x6) Network Engineer •Network Installation and Administration (CCNA Complete) Computer Assembling, Software Installation Computer Trouble Shooting Networking & Router Installation Network Cabling & Configuring

Saturday, March 26, 2011

இணையதள வடிவமைப்புக்கு உதவும் இலவச 

ஆன்லைன் HTML எடிட்டர்.

இணையதள வடிவமைப்பு உதவும் மொழிகளின் அடிப்படை மொழியான
HTML மொழியை எழுதும்போதே உடனுக்கூடன் சோதித்து தெரிந்து
கொள்ளும் பொருட்டு ஆன்லைன் மூலம் ஒரு HTML எடிட்டர்
வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
வலைப்பக்கம் / வலைமனை / இணையதளம் தாமாகவே
வடிவமைப்பதில் தற்போது பலதரப்பட்ட மக்களிடத்திலும் விருப்பம்
இருந்து வருகிறது. இணையதள வடிவமைப்பின் அடிப்படை
மொழியான HTML கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு
HTML பற்றிய அடிப்படை அறிவை உடனடியாக வளர்ப்பதற்காக
ஒரு தளம் நமக்கு உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.htmlinstant.com
சாதாரன Notepad -ல் கூட நாம் Html மொழியை தட்டச்சு செய்து நம்
உலாவில் சோதித்து பார்க்கலாம். ஆனால் இந்தத்தளத்திற்கு சென்று
நாம் படம் 1-ல் காட்டியபடி இடது பக்கம் Html மொழியை தட்டச்சு
செய்தால் உடனடியாக வலது பக்கத்தில் Output உடனுக்கூடன்
காட்டப்படுகிறது. Html மொழி கற்க விரும்புபவர்கள் ஒவ்வொரு
Html கட்டளையும் உலாவியில் எப்படி இயங்குகிறது என்று
உடனடியாக சரிபார்க்கலாம். இணையதளத்தின் அடிப்படை மொழியை
கற்க விரும்பும் அனைவருக்கும் இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.