H

என்னைப் பற்றி

My photo
Qatar, North, Qatar
Graphic Designer, (Adobe Photoshop cs5 Adobe Illustrator cs5 Adobe in-design cs5 Corel Draw x6) Network Engineer •Network Installation and Administration (CCNA Complete) Computer Assembling, Software Installation Computer Trouble Shooting Networking & Router Installation Network Cabling & Configuring

Saturday, April 16, 2011


பிரிட்டனில் பல வர்ண துலிப் பூக்கள் மலரும் காலம் இப்போது அரும்பியுள்ளது.

இங்குள்ள மிகப்பெரிய துலிப்பூந்தோட்டம் இப்போது வண்ணவண்ண மலர்களால் பூத்துக் குலுங்குகின்றது.

இந்தப் பூக்கள் வீணாக்கப்படாமல், முடியுமானவரைக்கும் முறையாகப் பறிக்கப்பட்டு அவற்றிலிருந்து உரிய பயன் பெறப்படுகின்றது.

பிரிட்டனில் பேர்கிங்ஹாம் அரண்மணைச் சூழல் உட்பட பல இடங்களில் இந்தப் பூ இப்போது பூத்துக்குலுங்க ஆரம்பித்துள்ளது.
 

Friday, April 15, 2011

அழகான கன்னங்களை பெற வேண்டுமா?

அழகான கன்னங்களை பெற வேண்டுமா? உங்கள் முகம் மற்றவர்களை வசீகரிக்க வேண்டுமா? கவலையை விடுங்கள் கன்னம் ஒட்டி இருப்பது ஒரு பெரிய குறையே இல்லை.



ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டால் மிக எளிதாக அழகான கன்னங்களை பெறலாம். உணவில் பெரும்பாலும் புரதம், மாவுச் சத்து, கொழுப்பு சத்து, நிறைந்த பொருட்களை நிறைய சேர்க்க வேண்டும்.



பால்,முட்டை, மீன், இறைச்சி, வெண்ணெய், நெய், வாழைப்பழம், வேர்க்கடலை, சுண்டல் ஆகியவற்றை அடிக்கடி உணவோடு சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.



பருப்பு, கீரைகள், ஆகிய உணவுகளை அதிகம் சோ்த்து கொள்ள வேண்டும்.



குறிப்பாக தினமும் எட்டு மணி நேரம் உறங்க வேண்டும். தேவையில்லாமல் கவலைப்படுவதை விட்டு விடுங்கள்.



இப்படி செய்து வந்தால் ஒட்டிய உங்களது கன்னம் புஷ்டியாக மாறி விடும்.

Wednesday, April 6, 2011

அணியின் தலைமைப் பதவியிலிருந்து விலகும் குமார் சங்ககார

ஒருநாள் சர்வதேச போட்டி, மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கான அணித்தலைவர் பதவியிலிருந்து குமார் சங்கக்கார இன்று செவ்வாய்க்கிழமை ராஜினாமா செய்துள்ளார்.
அதேவேளை எதிர்வரும் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய தொடர்கள் வரை தேர்வுக்குழுவினர் விரும்பினால் டெஸ்ட் அணிக்கு தலைமை தாங்கத் தயார் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இலங்கைக் கிரிக்கெட் சபை அதிகாரிகளுக்கு ஏற்கெனவே தான் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
சங்கக்காரவின் அறிக்கை வருமாறு:
தேசிய அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக நான் தீர்மானித்துள்ளேன். எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு புதிய, சிறந்த அணித் தலைவரை தெரிவுசெய்ய வேண்டியதன் அவசியத்தை நான் உணர்ந்துள்ளேன்.
இவ்வாண்டு நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக நான் இந்தத் தீர்மானத்தை எடுத்திருந்தேன். அடுத்த உலகக் கிண்ணத் தொடர் நடைபெறும்போது எனக்கு 37 வயதாகியிருக்கும் அந்தச் சந்தர்ப்பத்தில் சிறப்பாகவும் அர்ப்பணிப்புடனும் செயற்படும் தலைவர் ஒருவர் அவசியமாகிறார்.
அணித் தலைவராக இருந்த காலப்பகுதியில் நாட்டுக்காக விளையாடியதில் மகிழ்ச்சியும் திருப்தியும் உண்டு. எனினும் உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவிக்கொண்டமை வருத்தமளிக்கிறது. ஆனபோதும் நாம் சிறப்பாக விளையாடினோம் என்பதில் ஐயமில்லை.
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள எமது ரசிகர்கள் எமக்கு பக்கபலமாக இருந்தார்கள். அவர்களின் ஒத்துழைப்பை நான் என்றும் மறக்க மாட்டேன். உத்வேத்துடன் முன்னேறுவதற்கு அவர்கள் தந்த ஆதரவும் காரணமாக அமைந்திருந்தது. அதனால் ஒவ்வொரு வீரரும் நன்றிக்கடன் உடையவராக இருக்கிறோம்.
அணித் தோ்வாளர்களை நேற்று சந்தித்து எனது தீர்மானம் குறித்து ஆலோசித்தேன். புதிதாக நியமிக்கப்படும் தலைவர் சிறந்த நிலையில் முன்னேறுவதற்கு நாம் இடமளிக்க வேண்டும் என்பதையும் அவர்களிடம் குறிப்பிட்டேன்.
ஓய்வுபெறுவது குறித்து நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. எதிர்காலத்திலும் சிறந்த முறையில் எனது திறனை வெளிக்காட்ட முயற்சி செய்யவுள்ளேன்.
இந்தத் தருணத்தில் எனது அணிவீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அத்துடன் அணியை சிறப்பாக வழிநடத்திச்செல்ல உறுதுணையாக இருந்த எனது மனைவி, பிள்ளைகள் குடும்பத்தாருக்கும் நன்றி பகர்கிறேன். என்று கூறப்பட்டுள்ளது.
எனினும், தற்போதைக்கு போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் திட்டமில்லை எனவும் ‘இன்னும் 2-3 வருடங்களுக்கு நான் விளையாடுவேன்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

Sunday, April 3, 2011

காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில........

காதல் இல்லாத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். இனிமையாக பேசும் காதலர்கள் ஏனோ பெரும் சண்டை போடுவதிலும் வல்லவர்களாக இருக்கின்றார்கள். இப்படி நீங்களும் உங்கள் காதலியிடம் மாட்டிக் கொண்டிர்களா? அப்படியாயின் இப் பிரச்சனை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு....

1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மார்னிங்' ன்னு ஒரு SMS அனுப்பணும்.  உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபாய் செலவுதான். என்னங்க பண்றது?  பண்ணித்தான் ஆகணும்.) இதே விஷயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..


2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்'ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வெச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட்)


3. அவங்க பேரோட முதல் எழுத்தை பைக் கீ- செயின்'ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க...


4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிஷத்துக்கு ஒரு வாட்டி அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலாக் விடணும்'ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)


5. அவங்க பேர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வெச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கால் பண்ண சொல்லுங்க. அந்த பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.


6. கவிதைங்கிற பேர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்'ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.


7. "நீ ரொம்ப அழகா இருக்கேங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)


8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா முதலில் நீங்க ஓடர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஆர்டர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்'ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)


9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், " இந்த ட்ரஸ்'ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வெச்சிட்டு பொய் சொல்லணும்". (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)


10. ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சனைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது.


இந்த விஷயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க உங்கள் காதலும் பிரகாசமாய் இருக்கும்.

Friday, April 1, 2011

எங்கள் வீரர்கள்

வென்கடே மைதானமும் இந்திய இலங்கை அணிகளும் (சிறப்புக் கண்ணோட்டம்)
  
      உலக விளையாட்டு ரசிகர்களின் கவனத்தை கடந்த ஒன்றரை மாதங்களுக்கும்  மேலாக தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்த உலகக் கிண்ணக் கிரிக்கெட்  போட்டிகளின் நிறைவு நாளும் நெருங்கிவிட்டது. ஆம்! 10 ஆவது உலகக் கிண்ணக்  கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி மும்பை வென்;கடே மைதானத்தில் நாளை  நடைபெறவுள்ளது. இதில் அடுத்த 4 வருடங்களுக்கு தாங்களே  கிரிக்கெட்டின்  ராஜாக்கள் என மார்தட்டிக் கொள்வதற்காக இலங்கையும் இந்தியாவும்  பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

 36 வருட வரலாற்றைக் கொண்ட உலகக் கிண்ணக் கிரிக்கெட்டில் இரண்டு ஆசிய  அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கமைய  மேற்கத்தைய நாடுகளின் மகத்துவமிக்க விளையாட்டாகத் திகழ்ந்த கிரிக்கெட் ஆசியாவின் ஆதிக்கத்தின் கீழ் வந்துள்ளது என்றால் மிகையாகாது. கிரிக்கெட்டை அறிமுகப்படுத்திய இங்கிலாந்துக்கும் அதனை ஆண்டாண்டு காலம் ஆண்டுவந்த அவுஸ்திரேலியாவுக்கும் இம்முறை அரை இறுதிப் போட்டிவரைகூட இடமில்லை என்பதுதான் இங்கு சுவாரஸ்யமான விடயம்.

1992ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை ஒரு வெளிநாட்டு அணியுடன் ஆசிய அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றமைதான் கடந்த உலக் கிண்ணத் தொடர் வரையான வரலாறாக இருந்தது. இம்முறை அந்த வரலாறு மாற்றியமைக்கப்பட்டு நான்கில் மூன்று ஆசிய அணிகளான இந்தியாஇ பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகியன அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. அதிலிருந்து இந்தியாவும் இலங்கையும் தற்போது இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை உறுதி செய்துள்ளன.

இலங்கைக்கே வெற்றிக் கிண்ணம் என்பது இலங்கை ரசிகர்களின் நம்பிக்கையாகவும் இந்தியாவுக்கே வெற்றிக் கிண்ணம் என்பது இந்திய ரசிகர்களின் கருத்தாகவுமே தற்போதுள்ளது. எனினும். உண்மையில் எவ்வணி வெற்றிபெறும் என்பதுதான் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ள ஒரே கேள்வியாகும்.

இந்திய மற்றும் இலங்கை அணிகள் 1979ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை 128 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. அவற்றில் இந்தியா 67 வெற்றிகளையும்இ இலங்கை 50 வெற்றிகளையும் பெற்றுள்ளன. எஞ்சிய 11 போட்டிகளும் முடிவின்றி கைவிடப்பட்டுள்ளன.

இலங்கைக்கு எதிராக இந்தியா அதிக பட்சமாக 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 414 ஓட்டங்களை 2009ஆம் ஆண்டு ராஜ்கோட்டில் குவித்துள்ளது. இது இந்திய அணி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பெற்ற அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும். இந்தப் போட்டியில் பதிலளித்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 411 ஓட்டங்களைப் பெற்றது. இதுவே இந்தியாவுக்கு எதிராக இலங்கை பெற்ற அதிகபட்ச ஓட்டங்களாகும்.

2000 ஆம் ஆண்டு சார்ஜாவில் வைத்து 26.3 ஓவர்களில் 54 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தமைதான் இலங்கைக்கு எதிராகப் பெற்ற குறைந்தபட்ச ஓட்ட எண்ணிக்கை. இலங்கை அணி ஆகக்குறைவாக 1984ஆம் ஆண்டு சார்ஜாவில் 41 ஓவர்களில் 96 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

1987ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 41 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 299 ஓட்டங்களைக் குவித்ததே மும்பை வென்;கடே மைதானத்தில் இந்தியா பெற்ற அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும். இதுவரை இந்த மைதானத்தில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 8 வெற்றிகளையும் 6 தோல்விகளையும் பெற்றுள்ளது. அவற்றில் இலங்கையை இரண்டு தடவைகள் எதிர்கொண்டு அதில் ஒரு வெற்றியையும்இ ஒரு தோல்வியையும் சந்தித்துள்ளது.

1987ஆம் ஆண்டு இந்தியா பெற்ற 299 ஓட்டங்களுக்கு பதிலளித்தாடி 40 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 289 ஓட்டங்களைப் பெற்றதே வென்;கடே மைதானத்தில் இலங்கை பெற்ற அதிகபட்ச ஓட்டங்களாகும். இது இந்த மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்த மைதானத்தில் இந்தியாவைத் தவிர்த்து மேலும் 2 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அவற்றில் ஒரு வெற்றியையும்இ ஒரு தோல்வியையும் பெற்றுள்ளது.

இம்முறை உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் கனடாவுக்கு எதிராக கடந்த மார்ச் 13ஆம் திகதி நிய+ஸிலாந்து பெற்ற 358 ஓட்டங்களே மும்பை வென்;கடே மைதானத்தில் ஓர் அணி பெற்ற ஆகக்கூடிய ஓட்ட எண்ணிக்கையாகும். 1998ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக பங்களாதே~; அணி 36.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 115 ஓட்டங்களைப் பெற்றதே இம்மைதானத்தின் குறைந்தபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும்.

இந்த வரலாற்றையும் மைதானத்தில் ரசிகர்களின் ஆதரவையும் பொறுத்தமட்டில் இந்தியாவுக்கு 55 வீத வாய்ப்பும்இ இலங்கைக்கு 45 வீத வாய்ப்பும் உள்ளன. எனினும்இ இது வரலாற்றின் வெறும் கணிப்பே தவிர அண்மைக்கால போட்டிகளின் நிலையல்ல. அந்த வகையில் இரண்டு அணிகளும் இறுதி வரை வெற்றிக்காக கடுமையாகப் போராட வேண்டி இருக்கும் என்பதோடு இலங்கை அணியின் ஆதிக்கம் மேலோங்கவும் அதிக வாய்ப்புள்ளது.

ஏனெனில்இ இறுதிப் போட்டிகளில் இந்திய வீரர்கள் அவ்வப்போது பிரகாசிக்கத் தவறுகின்றமை வரலாறாகும். அதுவும் இலங்கையுடனான வேறு பல இறுதிப் போட்டிகளில் இந்தியா கிண்ணத்தை கோட்டை விட்ட வரலாறும் இருக்கவே செய்கின்றது. ஆகவேஇ இறுதிப் போட்டியில் இந்தியாவுக்குத்தான் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது எனக் கூறுவதில் அர்த்தமில்லை.
இரண்டு அணிகளுக்குமே சம அளவான வாய்ப்புகள் இருக்கின்றன. போட்டியன்று யார் சிறப்;பாகவும் சரியான தருணத்தில் நூறு வீதம் சிறப்பாகவும் செயற்படுகிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள் எனலாம். இதுவே முன்னாள் ஜாம்பவான்களான மேற்கிந்தியத் தீவுகளின் கிளைவ் லொய்ட்இ இந்தியாவின் கபில் தேவ்இ பாகிஸ்தானின் இம்ரான் கான்இ இலங்கையின் அர்ஜுன ரணதுங்கஇ அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் வோ ஆகியோர் ஒருமித்துக் கூறும் கருத்தாகும். இவர்கள் அனைவருமே தாங்கள் அணித்தலைவராக இருந்த காலப்பகுதியில் தமது அணிக்கு உலக சாம்பியன் மகுடத்தை ஈட்டிக்கொடுத்தவர்கள் என்பதுதான் சிறப்பம்சம்.

எவ்வாறாயினும்இ லீக் சுற்றில் தனது கடைசிப் போட்டியான நிய+ஸிலாந்துக்கு எதிரான சவாலை மும்பை வென்;கடே மைதானத்தில் எதிர்கொண்ட இலங்கை அதில் 112 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது. இந்த வெற்றியானது நாளைய போட்டியில் இலங்கை அணி வீரர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் மறுபேச்சுக்கு இடமில்லை.

                                                  வீரகேசரி இணையம்   
                                                   ஆர்.கே.எஸ்.