H

என்னைப் பற்றி

My photo
Qatar, North, Qatar
Graphic Designer, (Adobe Photoshop cs5 Adobe Illustrator cs5 Adobe in-design cs5 Corel Draw x6) Network Engineer •Network Installation and Administration (CCNA Complete) Computer Assembling, Software Installation Computer Trouble Shooting Networking & Router Installation Network Cabling & Configuring

Thursday, May 5, 2011

உஸாமாவின் மரணச் செய்தி: எழுகின்றன சந்தேகங்கள்..


- அபூ-ஆசியா -

2011 செப்டம்பர் 11 தாக்குதல் உண்மையிலேயே – உசாமா பின்லேடன் மற்றும் அவரது ஆதரவாளர்களால்தான் நடாத்தப்பட்டதா..? என்பதில் பல்வேறு முரண்பாடான கருத்துக்களும் சந்தேகங்களும் ஆய்வாளர்களால் ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டு அவைகளுக்கெல்லாம் வெறும் மழுப்பல்களை அன்றி – எந்தவிதமான தெளிவான பதிலையும் முன்வைக்காது காலங்கடத்தி வந்த அமெரிக்கா -

அதனது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மிகப் பிரமாண்டமான சக்தியாக மக்களுக்கு சித்தரிக்கப்பட்டிருந்த ஒசாமா பின்லேடன் அவர்களை கடந்த திங்கட்கிழமை அதிகாலை தரைமார்க்கமாக தாக்குதல் நடாத்தி – சுட்டுவீழ்த்தி உடலினை ஹெலிகப்டரில் எடுத்துச் சென்று அவசர அவசரமாக கடலில் தாட்டுவிட்டதாக அறிக்கை விட்டிருக்கிறது.

இந்த செய்தியின் நம்பகத்தன்மையில் மக்கள் மற்றும் ஊடகங்கள் எழுப்பக்கூடிய பல்வேறு சந்தேகங்களையும், இதனை வைத்து அமெரிக்கா சாதிக்க நினைப்பதென்னவாக இருக்கலாம் என்ற சில ஊகங்களையும் இங்கே பட்டியலிட விரும்புகின்றேன்.

சந்தேகங்கள்

1. முதல் குண்டை – பின்னால் இருந்து, தலையில் சுடப்பட்டதாகவும், முன்னால் இருந்து கண்ணில் சுடப்பட்டதாகவும் இருவேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. எது எப்படியோ – குண்டு துளைக்கும்போது வழிகின்ற இரத்தம் நிச்சயம் தாடியை ஈரப்படுத்தி இருக்கும். ஆகவே, குருதி உறைந்த தாடி முடியானது கட்டியாக காணப்பட வேண்டும். இதற்கான எந்த அறிகுறியுமின்றி – இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள முதலாவது புகைப்படத்தில் தாடி பிரஷ் ஆக காணப்படுகின்றது. அது எவ்வாறு ஏற்கனவே கொல்லப்பட்ட ஒருவருடைய தலைப்பகுதியை கம்ப்யுட்டர்மூலம் இணைக்கப்பட்டதாக இருக்கலாம் எனக் காட்டும் படங்கள் உடனேயே வெளிவந்திருந்தன. (இணையத்தள முகாமைத்துவத்தின் கருத்து: இது தொடர்பான படங்கள் ஏற்கெனவே எமது இணையத்தளத்தில் வெளிவந்திருப்பதை வாசகர்கள கவனிக்கவும். பரபரப்பை ஏற்படுத்துவதற்காக பல செய்திச்செவைகள் இப்படத்தை பாவித்திருந்தன பின்னர் முதலில் இதை வெளியிட்ட செய்திச் சேவை மன்னிப்புக் கோரியதாக உறுதிப்படுத்தப்பட முடியாத தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. எவ்வாறெனினும் தாக்குதல் தொடர்பில் படங்களை இன்னும் அமேரிக்கா உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை. படங்கள் மிகவும் குரூரமாக உள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்களை மேற்கொள காட்டி பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது, எனினும் இதற்கு முன்னர் பல குரூரமான படங்களை வெளியிட்ட அமெரிக்காவின் தற்போதைய நிலைப்பாடு சந்தேகங்களை வலுப்படுத்துகின்றது)
2. இயந்திரக் கோளாறு காரணமாக செயலிழந்த விமானத்தை – துப்புதுலக்க கூடாதென்ற நோக்கத்திற்காக அவர்களே குண்டைப் போட்டு அழித்துவிட்டதாக கூறியிருக்கின்றார்கள். ஆனால் – அது ஒசாமா ஆதரவாளர்களால் சுட்டுவீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று ஒரு ஊகம் எழுகின்றது. எது எப்படியோ – அவர்கள் சொன்ன கருத்துப் பிரகாரம் நோக்கினாலும் – எந்தவிதமான துப்பை அதிலிருந்து துலக்கமுடியும் என்பதையிட்டு அவர்கள் அச்சப்பட்டு தடயத்தை அழிக்க வேண்டும் என்பது புரியவில்லை. அதில் வேறேதும் உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட உயிராயுதங்களை அல்லது இரசாயனங்களை ஒசாமாவை தாக்கும் நோக்கத்திற்காக பிரயோகிக்க சுமந்து வந்தார்களா..? அல்லது அவர்களது நாடகத்தை தெளிவாக்கும் ஆதாரங்கள் ஏதும் அதில் சிக்கிக் கொண்டதா..? என்பது தெரியவில்லை.
3. பெரிய படைபலத்துடன் இருந்த சதாம் ஹுசைன் அவர்களையே உயிருடன் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தியவர்கள், மிக குறைந்த அளவிலான தற்பாதுகாப்பு வீர்ர்களுடன் இருந்த பின்லேடன் அவர்களை – மயக்கமருந்து போன்ற தோட்டாக்களைப் பயன்படுத்தி – உயிருடன் பிடிப்பதற்கான அவகாசம் இருந்தும் சுட்டுக்கொன்று, அவசர அவசரமாக எதற்காக – உடலை கடலில் மூழ்கடிக்க வேண்டும்..? தரையில் புதைத்தால், பின்னர் அதனைத் தோண்டியெடுத்து – பரிசோதனை செய்து உறுதிப்படுத்த உலகநாடுகள் கோரலாம் என்ற அச்சம்காரணமாக இருக்கலாம்.

ஊகங்கள்

1. எனவே, ஒசாமாவின் மரணத்துடன் பயங்கரவாதம் ஒழிந்துவிடவில்லை – அவர்களது ஆதரவாளர்களின் தாக்குதல்கள் எதிர்காலத்தில் இருக்கலாம் என்று அதிபர் ஒபாமா குறிப்பிட்டிருப்பது – அவ் ஆதரவாளர்கள் தஞ்சமடைந்திருக்கிறார்கள் என்ற காரணத்தைக் காட்டி, பாகிஸ்தான் அல்லது அதனை அண்மித்துள்ள முஸ்லிம் நாடுகள் மீதான நேரடிப் போர் ஒன்றையோ – அல்லது பாகிஸ்தான் மீதான சில ரகசியத் தாக்குதல்களை நடாத்திவிட்டு, தன் தலைவரைக் கொல்ல இடம்கொடுத்ததற்தாக போராளிகள் பலிவாங்குகின்றார்கள் என்று – உள்ளுர் கலவரங்களையோ தூண்ட எதிர்காலத்தில் திட்டமிட்டிருக்கலாம்.
2. அல்லது – தங்களது பரம எதிரியைக் கொல்ல பாகிஸ்தான் இடம் வழங்கியதற்கு நன்றிக்கடனாக – அதனது இராணுவ பலத்திற்கு வேண்டிய உதவிகளைச் செய்யப் போவதாக அறிவித்தோ – அல்லது உதிரியாக உள்ள ஒசாமா ஆதரவுத் தீவிரவாதிகளை வேட்டையாடப் போவதாக இடம்கேட்டோ, ஊடுருவி தளங்களை அமைத்து – இந்தியா அல்லது சீனாவினை கதிகலங்கச் செய்யவோ – நோட்டமிடவோ நீண்டகால வியுகங்களை இதன்மூலம் வகுத்திருக்கலாம்.
3. அல்லது அதிபர் ஒபாமா – இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்தவர் என்று மக்கள் மத்தியில் பரவலாக அடிபட்டுவரும் கருத்து அவரது அரசியல் செல்வாக்கில் சரிவை ஏற்படுத்திவிடலாம் என்பதற்காக இந்தநேரத்தில் ஒஸாமா அவர்களைக் கொல்வதுபோல அரங்கேற்றப்படும் ஒரு நாடகம் – அமெரிக்க மக்கள் செல்வாக்கை மறுபடி அதிகரிக்கவும், அதிபர் ஒபாமா பிறப்பால் தன் இனம் என்று பார்க்காது – அமெரிக்க மக்களின் நலனுக்காக, இஸ்லாமியப் போராளி என அடையாளப்படுத்தப்பட்ட ஒருவரின் விடயத்தில் எவ்வாறு நடந்து கொள்ளக்கூடியவர் என்று காட்டி மக்கள் ஆதரவைப் பெருக்கவும் எடுத்துக் கொண்ட முயற்சியாக கூட இருக்கலாம்.

எனவே, இந்த தாக்குதலின் பின்னணியில் இவ்வாறான பல மர்மங்கள் மறைந்து இருப்பதாகவே தோன்றுகின்றது.

எது எப்படியோ, மரணத்தை வென்ற மனிதர்கள் உலகில் கிடையாது – அந்தவகையில் ஒஸாமா பின்லேடன் அவர்களின் இந்த தாக்குதலிலும் மரணித்து இருக்கலாம். அல்லது இதற்கு முன்னர் இடம்பெற்ற தாக்குதல்களில் மரணித்த்து தெரிந்தும் அமெரிக்கா வேறு ஏதாவது உள்நோக்கங்களுக்காக அதனை மூடி மறைத்து குறிப்பிட்ட சில நாடுகளில் போர் சூழலை தொடர வைப்பதற்காக காலத்தை நகர்த்தி இருக்கலாம்.

அல்லது ஒஸாமா பின் லேடன் – இன்னமும் எங்கேயோ ஒரு மூலையில் இவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு அப்பால் அப்பாவித்தனமான ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கலாம்.

யாவற்றையும் அல்லாஹ்வே நன்கறிந்தவன்..

”பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் ”நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்” என்று அவர்கள் சொல்கிறார்கள். நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ, ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை. ( அல்குர்ஆன் – 2 : 11-12 )